களைகள் ஏன் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன?
களைகள் மிகவும் ஆபத்தானவை, ஏனெனில் அவை உங்கள் பயிருடன் போட்டிபோட்டு வளர்ந்து, பயிருக்குச் செல்ல வேண்டிய ஊட்டச்சத்துக்கள், நீர், சூரிய ஒளி போன்ற மதிப்புமிக்க, சக்தி தரும் உணவு சத்துக்களை எடுத்துக்கொள்கின்றன. இதனால் , உற்பத்தி செய்யப்படும் நெல்லின் தரம் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படுகிறது.
களைகளைச் சரியான முறையில் கட்டுப்படுத்துவது எப்படி?
களைகளைச் சரியான முறையில் கட்டுப்படுத்துவது என்பது, பெரும்பாலும் விவசாயிகளால் கவனிக்கப்படாத இரண்டு முக்கியமான காரணிகளைப் பொறுத்து அமைகிறது. இதனால் பயிர்ச் சேதம் அதிகரித்து உற்பத்தித்திறனும் மோசமாகப் பாதிப்படைகிறது. எனவே, குறைந்த வேலையாட்களைக் கொண்டு அதிக மகசூலைப் பெறுவதற்கான களைக் கட்டுப்பாட்டுத் திட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
1) ரிஃபிட் பிளஸ் (Rifit Plus) களைக்கொல்லியை வயலில் இடுவதற்கான காலம் - நடவு செய்த நாளில் இருந்து 0 முதல் 3 நாட்கள் வரை *
2) வயலில் இடுவதற்கான சரியான முறை - மணலுடனும் உரக் கலவையுடன் களைக்கொல்லியைச் சேர்த்துப் பயன்படுத்துவதே மிகவும் பாதுகாப்பானது, வசதியானதும் கூட.
ரிஃபிட் பிளஸை (Rifit Plus) பயன்படுத்தி நெற்பயிரில் களைகள் தோன்றாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
ரிஃபிட் பிளஸ் என்பது நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களில் களைகள் முளைக்காமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட களைக்கொல்லியாகும்.
ரிஃபிட் பிளஸில் உள்ள DSA மூலப்பொருளானது உங்கள் நெல் வயலின் ஒவ்வொரு மூலையிலும் பரவுவதால் களைகளை விரைவாகவும் எளிதாகவும் கட்டுப்படுத்துகிறது:
- விரைவாகக் கரையக்கூடியது (2 நிமிடங்களில் )
- வயலில் விரைவாகப் பரவுகின்றன
- விரைவாகச் செயல்பட்டு பூச்சிகளை அழிக்கின்றன
தண்டழுகல் நோயை உருவாக்கும் பூச்சியான தண்டுத் துளைப்பான் உங்கள் பயிருக்கு ஏன் ஆபத்தாக உள்ளது?
தண்டுத் துளைப்பான் நெற்பயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பூச்சியாகும். ஏனெனில் இது பயிரின் ஆரம்ப வளர்ச்சி நிலையிலேயே உருவாகி, கடைசியில் நெல்லின் ஒட்டுமொத்த தரத்தையும் மற்றும் விளைச்சலையும் பாதித்துவிடுகிறது. இதனால் 20% முதல் 70% வரை மகசூலை இழக்க நேரிடும். நெற்பயிர்களே இந்தப் பூச்சியால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பயிரின் ஆரம்ப கட்ட வளர்ச்சி நிலையிலிருந்து, பூக்கும் நிலை வரை இதன் தாக்கம் தொடர்கிறது.
தண்டுத் துளைப்பானை எவ்வாறு அடையாளம் காண்பது?
தண்டுத் துளைப்பான்கள் இலையின் மேற்பரப்பில் ஓரிடத்திற்கு 15-80 என்ற எண்ணிக்கையில் தொகுப்பாக பழுப்பு நிற முட்டைகளை இடுகின்றன.
இவற்றின் இளம் லார்வாக்கள் ஒரு பட்டு நூலை உருவாக்கி அதன் மூலம் ஒரு பயிரின் இலைகளில் இருந்து இன்னொரு பயிருக்குத் தாவி அதையும் உண்கின்றன. வளர்ச்சியடைந்த பூச்சிகள் பயிரின் தண்டையும் கிளைகளையும் உண்டு அவற்றில் துளைகளை ஏற்படுத்துகின்றன.
தண்டுத் துளைப்பானை எவ்வாறு அடையாளம் காண்பது?
தண்டுத் துளைப்பானால் ஏற்படும் சேதத்தை பயிரில் தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு காணலாம். அதன் பிறகு சேதத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும். இதன் காரணமாக, தொற்று ஏற்படுவதற்கு முன்பே நீங்கள் செயல்பட்டாக வேண்டும்.நாற்றுகளைத் தாமதமாக நடும்போது இந்தப் பூச்சியினால் மகசூல் அதிகம் பாதிக்கப்படுவதால் இளம் நாற்றாக இருக்கும்போதே நடவுசெய்துவிடுங்கள். பூச்சிக்கொல்லியைத் தாமதமாகத் தெளித்தால் மகசூல் இழப்பை மீட்க முடியாது என்பதால் அதை உடனே பயன்படுத்தி பூச்சியைக் கட்டுப்படுத்துங்கள்.
விர்டாகோ (Virtako) தண்டுத் துளைப்பானுக்கு எதிராக ஆற்றலுடன் செயல்பட்டு நெற்பயிருக்கு நீண்ட...