விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

www.syngenta.co.in தளத்துக்கு வரவேற்கிறோம்.  இந்த வலைத்தளம் சின்ஜென்ட்டா பற்றியும், அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றியும் பொதுவான தகவல்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஒப்புக்கொண்டால், இந்த வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கான உங்கள் ஒப்புதல்

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக மதிப்பாய்வு செய்ய தயவுசெய்து ஒரு சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளவும். இந்த வலைத்தளத்தை அணுகுவதன் மூலமும் பயன்படுத்துவதன் மூலமும் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவதற்கும் கட்டுப்படுவதற்கும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.  இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவதற்கும் கட்டுப்படுவதற்கும் நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், இந்த வலைத்தளத்திலிருந்து நீங்கள் மூலவளங்களை அணுகவோ, பயன்படுத்தவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ முடியாது. 

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறக்கூடும்

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முன்னறிவிப்பு ஏதுமின்றி எந்த நேரத்திலும் புதுப்பிப்பதற்கு அல்லது மாற்றியமைப்பதற்கு சின்ஜென்ட்டாவுக்கு உரிமை உள்ளது.  அவ்வாறு மாற்றம் செய்த பின் நீங்கள் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்தும்போது, மாற்றம் செய்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கடைப்பிடிப்பதற்கும் அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்கும் நீங்கள் ஒப்புக்கொண்டதாக ஆகிறது. இந்தக் காரணத்திற்காக, நீங்கள் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்யுமாறு நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

பதிப்புரிமை அறிக்கை மற்றும் வரையறுக்கப்பட்ட உரிமம்

இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கின்ற மற்றும் கேட்கின்ற அனைத்தும் (”உள்ளடக்கம்”), உதாரணமாக அனைத்து உரைகள், புகைப்படங்கள், விளக்கங்கள், கிராஃபிக்ஸ், ஆடியோ கிளிப்புகள், வீடியோ கிளிப்புகள் மற்றும் ஆடியோ-வீடியோ கிளிப்புகள் ஆகியவை உட்பட, ஐக்கிய அமெரிக்கச் சட்டம் மற்றும் பொருந்தக்கூடிய சர்வதேச பதிப்புரிமைச் சட்டங்கள் மற்றும் ஒப்பந்த விதிகளின் கீழ் பதிப்புரிமை செய்யப்பட்டுள்ளது.  உள்ளடக்கத்தில் உள்ள பதிப்புரிமைகள் சின்ஜென்ட்டா கார்ப்பரேஷன் அல்லது அதன் இணை நிறுவனங்களில் ஒன்றுக்கு, அல்லது தங்கள் ஆக்கப்பொருள்களை சின்ஜென்ட்டாவுக்கு உரிமம் அளித்துள்ள மூன்றாம் தரப்பினருக்குச் சொந்தமானதாகும். இந்தத் தளத்தின் மொத்த உள்ளடக்கமும் ஐக்கிய அமெரிக்கச் சட்டம் மற்றும் பொருந்தக்கூடிய சர்வதேச பதிப்புரிமைச் சட்டங்கள் மற்றும் ஒப்பந்த விதிகளின் கீழ் ஒரு கூட்டுமுயற்சி வேலையாக பதிப்புரிமை செய்யப்பட்டுள்ளது மற்றும் உள்ளடக்கத்தை தேர்ந்தெடுத்தல், ஒருங்கிணைத்தல், ஒழுங்கமைத்தல் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு சின்ஜென்ட்டா பதிப்புரிமை பெற்றுள்ளது.

பின்வரும் நிகழ்வுகளில், இந்தத் தளத்தின் உள்ளடக்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம், சேமிக்கலாம், அச்சிடலாம் அல்லது நகல் செய்யலாம்:

• நீங்கள் பதிவிறக்கம் செய்த உள்ளடக்கத்தை உங்கள் தனிப்பட்ட, வர்த்தகமற்ற பயன்பாட்டுக்காக, அல்லது சின்ஜென்ட்டாவுடன் நீங்கள் கொண்டுள்ள வியாபார உறவுகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தினால்
• உள்ளடக்கத்தின் ஏதாவதொரு பகுதியை வேறு எந்த இணையதளத்திலும் நீங்கள் வெளியிடாமல் அல்லது இடுகையிடாமல் இருந்தால்;

உள்ளடக்கத்தின் ஏந்தவொரு பகுதியையும் வேறு ஏதாவது ஊடகங்களில் நீங்கள் வெளியிடாமல் அல்லது ஒளிபரப்பாமல் இருந்தால்;

உள்ளடக்கத்தை எந்த வழியிலும் நீங்கள் மாற்றியமைக்காமல் அல்லது திருத்தாமல் இருந்தால் அல்லது ஏதாவது பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரை அறிவிப்புகளை அல்லது இரகசியத்தன்மை அறிவிப்புகளை நீக்காமல் அல்லது மாற்றியமைக்காமல் இருந்தால்.
 
மேலே வெளிப்படையாக கூறப்பட்டதைத் தவிர, சின்ஜென்ட்டாவிடமிருந்து முதலில் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல் இந்தத் தளத்தின் உள்ளடக்கத்தை முழுமையாக அல்லது அதன் ஒரு பகுதியை நீங்கள் நகல் செய்தல், பதிவிறக்குதல், அச்சிடுதல், பிரசுரித்தல், காண்பித்தல், செயல்நிகழ்த்துதல், விநியோகித்தல், மொழிபெயர்த்தல், மாற்றியமைத்தல், எதிலாவது சேர்த்தல், புதுப்பித்தல், தொகுத்தல், சுருக்கி எழுதுதல் அல்லது வேறு ஏதாவது வழியில் மாற்றுதல் அல்லது உபயோகத்திற்கேற்றவாறு மாற்றியமைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது. 
 
மேலே வெளிப்படையாக கூறப்பட்டதைத் தவிர, நீங்கள் இந்தத் தளத்திலிருந்து உள்ளடக்கத்தைப் பதிவிறக்கம் செய்யும்போது பதிவிறக்கம் செய்த உள்ளடக்கத்தின் உரிமை, உடைமையுரிமை அல்லது பாத்தியதை எதுவும் உங்களுக்கு மாற்றப்படுவதில்லை.  மேலே வெளிப்படையாக வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட, பிரத்தியேக உரிமத்தைத் தவிர இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில், அல்லது இந்த வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ள எதுவும், அது மறைமுகமானதாக, அல்லது தடையுத்தரவு கொண்டதாக அல்லது வேறுவகையிலானதாக இருந்தாலும், அல்லது சின்ஜென்ட்டா அல்லது ஏதாவது மூன்றாம் தரப்பின் பதிப்புரிமை, வர்த்தக முத்திரை, காப்புரிமை அல்லது பிற அறிவுசார் சொத்துரிமை கொண்டதாக இருந்தாலும், உரிமத்தை வழங்கியுள்ளதாக கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.

வர்த்தக முத்திரை அறிவிப்பு

இந்த வலைத்தளத்தில் காண்பிக்கப்பட்டுள்ள வர்த்தக முத்திரைகள், சேவை முத்திரைகள் மற்றும் லோகோக்கள் அனைத்தும் (”வர்த்தக முத்திரை(கள்)”) சின்ஜென்ட்டா, அதன் இணைநிறுவனங்களில் ஒன்று, அல்லது சின்ஜென்ட்டா அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கு தங்கள் வர்த்தக முத்திரைகளை உரிமம் வழங்கியுள்ள மூன்றாம் தரப்பினர் ஆகியோர் சின்ஜென்ட்டாவின் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வர்த்தகமுத்திரைகள் ஆகும்.

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் வெளிப்படையாக கூறப்பட்டதைத் தவிர, சின்ஜென்ட்டாவிடமிருந்து முதலில் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல் எந்தவொரு வர்த்தக முத்திரையையும் நீங்கள் நகலெடுக்கவோ, காட்சிப்படுத்தவோ அல்லது மற்றவகையில் பயன்படுத்தவோ கூடாது.

கோரப்படாத யோசனைகள்

இந்த வலைத்தளம் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டத்தையும் சின்ஜென்ட்டா வரவேற்கிறது.  இந்த வலைத்தளம் வாயிலாக சின்ஜென்ட்டாவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட, ஏதேனும் கருத்துக்கள், பின்னூட்டம், யோசனைகள், கேள்விகள், வடிவமைப்புகள், தரவு அல்லது இதுபோன்ற பிற தகவல்கள் மற்றும் ஆக்கப்பொருள்கள் அனைத்தும் இரகசியமல்லாதவை எனவும் தனியுரிமை சாராதவை எனவும் கருதப்படும்.  இந்தக் காரணத்திற்காக, தயாரிப்பு யோசனைகள், கணினிக் குறியீடு, அல்லது அசல் கலைப்படைப்பு போன்ற ஏதேனும் இரகசியத் தகவல் அல்லது ஏதேனும் அசல் படைப்புத்திறன் பொருள்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி எங்களுக்கு நீங்கள் ஒதுக்கீடு செய்ய விரும்பாத ஏதேனும் தகவல் அல்லது ஆக்கப்பொருள்களை நீங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டாம் என நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வலைத்தளம் வாயிலாக சின்ஜென்ட்டாவுக்கு தகவல்தொடர்புகள் மற்றும்/அல்லது ஆக்கப்பொருள்களை சமர்ப்பிப்பதன் மூலம், நீங்கள் சமர்ப்பிக்கும் தகவல் மற்றும் / அல்லது ஆக்கப்பொருள்களில் அனைத்து பதிப்புரிமைகள் மற்றும் பிற அறிவுசார் சொத்துரிமைகளின் உலகளாவிய உரிமைகள், உடைமையுரிமைகள் மற்றும் பாத்தியதைகளை சின்ஜென்ட்டாவுக்கு நீங்கள் இலவசமாக ஒதுக்கிக் கொடுக்கிறீர்கள்.   இந்தத் தளத்தின் வாயிலாக நீங்கள் சமர்ப்பிக்கின்ற எந்தவொரு தகவலையும் மற்றும் / அல்லது ஆக்கப்பொருள்களையும், அத்தகைய தகவல்கள் மற்றும் / அல்லது ஆக்கப்பொருள்களில் இடம்பெற்றுள்ள ஏதேனும் யோசனைகள், கருத்துக்கள், வழிவகை அறிவு அல்லது நுட்பங்களையும், எந்தவித கட்டுப்பாடின்றியும் எந்த வகையிலும் உங்களுக்கு இழப்பீடு வழங்காமலும் அத்தகைய தகவல்கள் அல்லது ஆக்கப்பொருள்களைப் பயன்படுத்தி தயாரிப்புகளை உருவாக்குவது, உற்பத்தி செய்வது மற்றும் சந்தைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்துவதற்கான உரிமையை சின்ஜென்ட்டா பெற்றிருக்கும்.  

ஆயினும், இந்த வலைத்தளத்தின் வாயிலாக நீங்கள் சமர்ப்பிக்கின்ற எந்தவொரு தகவல்களையும் அல்லது ஆக்கப்பொருள்களையும் பொருந்தக்கூடிய தனியுரிமைச் சட்டங்களை மீறுகின்ற ஒரு வழியில் சின்ஜென்ட்டா பயன்படுத்தாது. குறிப்பாக, பின்வருபவை தவிர பிற சூழ்நிலைகளில் சின்ஜென்ட்டா உங்கள் பெயரை வெளியிடாது அல்லது தகவல்களை அல்லது ஆக்கப்பொருள்களை நீங்கள் எங்களிடம் சமர்ப்பித்திருக்கிறீர்கள் என்ற உண்மையை வெளியிடாது: (a) உங்கள் பெயரைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதி பெற்றிருந்தால்; அல்லது (b) இந்தத் தளத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியாக நீங்கள் சமர்ப்பிக்கின்ற ஆக்கப்பொருள்கள் அல்லது பிற தகவல்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும் அல்லது பிற வகையில் பயன்படுத்தப்படும் என நாங்கள் முதலிலேயே அறிவித்திருந்தால்; அல்லது (c) நாங்கள் சட்டப்படி அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால்.

இந்த வலைத்தளத்தின் வாயிலாக நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு தகவல்தொடர்புகளிலும் இடம்பெற்றுள்ள தகவல் மற்றும் பிற உள்ளடக்கங்களுக்கு, அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் துல்லியம் உட்பட எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் நீங்களே பொறுப்பாவீர்கள்.

மூன்றாம் தரப்பு தகவல்

மூன்றாம் தரப்பு செய்திகள் மற்றும் பங்கு விலைக்குறியீட்டு சேவைகள் உட்பட, இந்தத் தளத்தின் வாயிலாக கிடைக்கும் சில தகவல்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆக்கப்பொருள்கள் மூன்றாம் தரப்பினரால் சின்ஜென்ட்டாவுக்கு வழங்கப்படுகின்றன. எங்கள் கருத்துப்படி, நடைமுறைக்கு சாத்தியமுள்ள இடங்களில் இந்த மூன்றாம் தரப்பு பொருள்களின் ஆதாரம் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் தரப்பு பொருள்கள் உங்கள் ஆர்வம் மற்றும் வசதிக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்த ஆக்கப்பொருள்களை அல்லது அவற்றை எங்களுக்கு வழங்குகின்ற விற்பனையாளர்களை சின்ஜென்ட்டா ஆதரிப்பதில்லை, அல்லது இந்த ஆக்கப்பொருள்கள் நடப்பில் உள்ளவை, துல்லியமானவை, முழுமையானவை அல்லது நம்பகமானவை என சின்ஜென்ட்டா உத்தரவாதம் அளிப்பதில்லை. மூன்றாம் தரப்புத் தகவல் பயன்படுத்தப்படுகின்ற எதற்கும் சின்ஜென்ட்டா எந்தப் பொறுப்பும் ஏற்பதில்லை.

மற்ற வலைத்தளங்களுக்கான இணைப்புகள்

இந்தத் தளம் சின்ஜென்ட்டாவால் இயக்கப்படாத வலைத்தளங்களுக்கான மீத்தொடுப்புகளைக்  கொண்டிருக்கிறது.  இந்த மீத்தொடுப்புகள் உங்கள் குறிப்புக்காகவும் வசதிக்காகவும் மட்டுமே வழங்கப்படுகின்றன, மற்றும் இவை இந்த மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கு எந்தவொரு ஏற்பிசைவையும் குறிப்பாகத் தெரிவிப்பதில்லை அல்லது அவற்றின் ஆபரேட்டர்களுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருப்பதில்லை. சின்ஜென்ட்டா இந்த வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதில்லை மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களுக்குப் பொறுப்பேற்பதில்லை. உங்கள் சொந்தப் பொறுப்பில் மட்டுமே இந்த வலைத்தளங்களை நீங்கள் அணுகுகிறீர்கள் மற்றும் பயன்படுத்துகிறீர்கள். 

தயாரிப்புத் தகவல்

இந்த வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ள அல்லது குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு தகவலும் பொருத்தமானது மட்டுமே. மற்றும், சின்ஜென்ட்டாவுக்கும் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் ஓர் அறிமுகம் என்பதைத் தவிர வேறு விதமாக இதைப் பொருள்கொள்ளக் கூடாது.    எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான குறிப்பிட்ட ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு, தயவுசெய்து சின்ஜென்ட்டாவை நேரடியாகத் தொடர்புகொள்ளவும். பயிர் பாதுகாப்பு அல்லது விதை தயாரிப்பைப் பயன்படுத்த விரும்புகின்ற நபர்கள் அந்தத் தயாரிப்புடன் வருகின்ற லேபிளைப் படித்துப் பார்த்து அதைப் பின்பற்ற வேண்டும் மற்றும் அந்தத் தயாரிப்பைப் பயன்படுத்துவது தொடர்பான அனைத்து பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும். எந்தவொரு பயிர் பாதுகாப்பு தயாரிப்பையும் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் நாட்டில் பயன்படுத்துவதற்கு அது பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவும்.

உலகளாவிய கிடைக்கும் தன்மை

உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுவதால், சில தயாரிப்புகள் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன, மற்ற நாடுகளில் கிடைப்பதில்லை.  இந்தத் தளம் உங்கள் நாட்டில் கிடைக்காத அல்லது அறிவிக்கப்படாத சின்ஜென்ட்டா தயாரிப்புகள், திட்டங்கள் அல்லது சேவைகளுக்கான மேற்கோள்கள் அல்லது உப மேற்கோள்களைக் கொண்டுள்ளது.  இந்த மேற்கோள்கள் அத்தகைய தயாரிப்புகள், திட்டங்கள் அல்லது சேவைகளை சின்ஜென்ட்டா உங்கள் நாட்டில் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது என்பதைக் குறிக்கவில்லை.  எந்தத் தயாரிப்புகள், திட்டங்கள் அல்லது சேவைகள் உங்களுக்குக் கிடைக்கலாம் என்பதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், உங்கள் உள்ளூர் சின்ஜென்ட்டா விற்பனைப் பிரதிநிதியிடம் ஆலோசிக்கவும் அல்லது சின்ஜென்ட்டாவைத் தொடர்புகொள்ளவும்.

வலைத்தளத்தை மாற்றுவதற்கான உரிமை

ஏதாவதொரு வழியில் இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டை மாற்றுவதற்கான, அல்லது இந்த வலைத்தளத்துக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதற்கான, அல்லது எந்த நேரத்திலும் எதாவதொரு காரணத்திற்காக முன்னறிவிப்பு ஏதுமின்றி இந்த வலைத்தளத்தை மூடுவதற்கான உரிமையை சின்ஜென்ட்டா பெற்றுள்ளது, மற்றும் அத்தகைய மாற்றங்களால் ஏற்படும் சாத்தியமுள்ள விளைவுகளுக்கு சின்ஜென்ட்டா எந்த வகையிலும் பொறுப்பேற்காது.  

இது ஒரு சலுகையோ அல்லது முதலீடு செய்வதற்கான அழைப்போ அல்ல

இந்த வலைத்தளத்தில் உள்ள தகவல்கள் சின்ஜென்ட்டாவின் பங்குகள் அல்லது பிற பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான அல்லது பிற வழிகளில் வணிகம் செய்வதற்கான சலுகையை அல்லது அழைப்பை அமைக்காது அல்லது அவ்வாறாக கருதப்பட மாட்டாது. அல்லது அத்தகைய சலுகை அல்லது அழைப்பு மேற்கொள்ளப்படுவதில்லை அல்லது கோரப்படுவதில்லை. பங்கு விலைகள், மற்றும் அந்தப் பங்குகளிலிருந்து பெறப்படும் வருமானம் ஆகியவற்றில் எந்த நேரத்திலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம், மற்றும் கடந்த கால செயல்திறன் எதிர்கால செயல்திறனுக்கான ஒரு அறிகுறியாக இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை வருங்கால முதலீட்டாளர்கள் தெரிந்திருக்க வேண்டும். எந்தவொரு முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன்னரும் வருங்கால முதலீட்டாளர்கள் சுயாதீன நிதி ஆலோசனை பெற வேண்டும்.

எதிர்காலக் கண்ணோட்டம் கொண்ட அறிக்கைகள்

எங்கள் வலைத்தளம் எதிர்காலக் கண்ணோட்டம் கொண்ட அறிக்கைகளைக் கொண்டிருக்கலாம் - அதாவது, எங்கள் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பற்றிய அறிக்கைகள் உள்ளடக்கிய, வரலாற்று உண்மைகள் அல்லாத அறிக்கைகள். இந்த அறிக்கைகள் தற்போதைய திட்டங்கள், மதிப்பீடுகள் மற்றும் கருத்துருக்களின் அடிப்படையில் அமைந்தவையாகும், எனவே வாசகர்கள் அவற்றின் மீது தேவைக்கு அதிகமான நம்பிக்கை வைக்கக்கூடாது. இந்த அறிக்கைகள் உள்ளார்ந்த அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன, அவற்றில் பல சின்ஜென்ட்டாவின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை ஆகும். யு.எஸ். பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துடனான எங்கள் தாக்கல்களில், இந்த எதிர்காலக் கண்ணோட்டம் கொண்ட அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளவற்றிலிருந்து ஆக்கப்பொருள் ரீதியாக வேறுபடக்கூடிய உண்மையான முடிவுகளை ஏற்படுத்தக்கூடிய குறிப்பிட்ட சில காரணிகளை நாங்கள் அடையாளம் கண்டறிந்துள்ளோம்.     எதிர்காலக் கண்ணோட்டம் கொண்ட அறிக்கைகள் அவை தயாரிக்கப்பட்ட தேதியின் அடிப்படையிலான விவரங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன, மற்றும் புதிய தகவல்கள் அல்லது எதிர்கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு அவற்றில் எதையும் புதுப்பிப்பதற்கான எந்தப் பொறுப்பையும் நாங்கள் ஏற்கவில்லை. 

உத்தரவாதங்களின் மறுதலிப்பு

இந்த வலைத்தளம் எந்த வகையான உத்தரவாதங்களையும் அளிக்காமல், “உள்ளது உள்ளவாறே,” “கிடைக்கக்கூடியது அப்படியே” வழங்கப்படுகிறது. பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க முடிந்த அளவுக்கு முழுமையாக, சின்ஜென்ட்டா மற்றும் அதன் இணை நிறுவனங்கள் வர்த்தகத் தன்மைக்கான மறைமுக உத்தரவாதங்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி, மற்றும் விதிமீறல் இல்லா நிலை ஆகியவற்றை உள்ளடக்கிய மேலும் பல வெளிப்படையான, மறைமுகமான அல்லது சட்டரீதியான அனைத்து உத்தரவாதங்களையும் மறுதலிக்கிறது.    மேற்கூறியதைக் கட்டுப்படுத்தாமல், இந்த வலைத்தளம் எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் அல்லது இடத்திலும் கிடைக்கும் அல்லது அதன் செயல்பாடு தடையின்றி அல்லது பிழையில்லாமல் இருக்கும் என்பதற்கு சின்ஜென்ட்டா பரிந்துரையோ அல்லது உத்தரவாதமோ அளிப்பதில்லை.   இந்தத் தளத்தின் உள்ளடக்கங்கள் வைரஸ்கள், வார்ம்கள் அல்லது களங்கம் அல்லது அழிவு உண்டாக்குகின்ற பண்புகளை தெளிவாகக் காட்டுகின்ற பிற சட்டவிதிகளைக் கொண்டிருக்கும் என்பதற்கு சின்ஜென்ட்டா பரிந்துரையோ அல்லது உத்தரவாதமோ அளிப்பதில்லை.   சின்ஜென்ட்டா துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்திருந்தாலும் கூட அல்லது தொடர்ந்து எடுத்துவந்தாலும் கூட, இந்த வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் முழுமையற்றதாக அல்லது காலம் கடந்ததாக இருக்கலாம் மற்றும் அதில் துல்லியமற்ற தகவல்கள் அல்லது அச்சுப் பிழைகள் இடம்பெற்றிருக்கலாம். இந்த வலைத்தளத்தின் பயன்பாடு, நம்பகத்தன்மை, துல்லியம், புதுப்பித்த நிலை அல்லது நம்பகத்தன்மை தொடர்பாக, அல்லது இதைப் பயன்படுத்துவதனால், அல்லது இந்த வலைத்தளத்தை வேறு வகையில் மதிப்பளிப்பதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக அல்லது இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படும் ஏதேனும் தகவல் தொடர்பாக சின்ஜென்ட்டா எந்த உத்தரவாதங்களும் அளிப்பதில்லை அல்லது எந்தப் பரிந்துரைகளையும் மேற்கொள்வதில்லை.

பொறுப்பின் குறைபாடுகள்

உங்கள் சொந்தப் பொறுப்பில் மட்டுமே இந்த வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலைகளிலும், சின்ஜென்ட்டா மற்றும் அதன் இணை நிறுவனங்கள் அல்லது அவற்றின் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் அல்லது முகவர்களில் எவரும், இந்த வலைத்தளத்தை நீங்கள் அணுகுவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்த இயலாத நிலை அல்லது இந்த வலைத்தளத்தில் அளிக்கப்பட்டுள்ள ஏதேனும் தகவல்களை நீங்கள் சார்ந்திருப்பது ஆகியவற்றின் காரணமாக அல்லது ஆகியவை தொடர்பாக எழும் எந்தவொரு நேரடியான அல்லது மறைமுகமான இழப்புகள் அல்லது சேதங்களுக்கும் பொறுப்பேற்க மாட்டார்கள்.  மேற்கூறியதைக் கட்டுப்படுத்தாமல், சின்ஜென்ட்டா இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கங்களில் உள்ள சாத்தியமுள்ள பிழைகள் அல்லது விடுபடல்களுக்கு எந்த வழியிலும் பொறுப்பேற்காது; இது குறிப்பாக  சின்ஜென்ட்டாவால் விநியோகிக்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான எந்தப் பரிந்துரைகளுக்கும் பொருந்தும். இது தரவு, வருவாய் அல்லது இலாப இழப்பு ஆகியவை உள்ளிட்ட மேலும் பல நேரடியான அல்லது மறைமுகமான, பொது, சிறப்பு, தற்செயலான, விளைவு சார்ந்த, முன்மாதிரியான அல்லது மற்ற ஏதேனும் வகையிலான அனைத்து இழப்புகள் மற்றும் சேதங்களுக்கும் பொருந்துகின்ற முழுமையான பொறுப்புக் கட்டுப்பாடு ஆகும். கூறப்படும் பொறுப்பு ஒப்பந்தம், அக்கறையின்மை, அநீதி, கடுமையான பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலோ அல்லது வேறு ஏதாவது அடிப்படையிலோ அமைந்திருந்தால் இந்த பொறுப்புக் கட்டுப்பாடு பொருந்துகிறது மற்றும் அத்தகைய சேதங்கள் குறித்து சின்ஜென்ட்டாவின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தால் அல்லது அவற்றுக்கான சாத்தியக்கூறு பற்றி அவர்கள் அறிந்திருந்தாலும் பொருந்தும்.   

சில நாடுகள் அல்லது குறிப்பிட்ட சில நாடுகளின் சில அரசியல் துணைப்பிரிவுகள் மேலே விளக்கிக் கூறப்பட்ட பொறுப்புக் கட்டுப்பாட்டை அனுமதிப்பதில்லை, எனவே இந்த பொறுப்புக் கட்டுப்பாடு உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம். இந்த பொறுப்புக் கட்டுப்பாட்டின் ஏதாவதொரு பகுதி ஏதாவதொரு காரணத்திற்காக செல்லுபடியாகாததாக அல்லது செயல்படுத்த முடியாததாக இருப்பது கண்டறியப்பட்டால், பொறுப்பிற்கான அத்தகைய சூழ்நிலைகளின் கீழ் சின்ஜென்ட்டா மற்றும் / அல்லது அதன் இணை நிறுவனங்களின் கட்டுப்படுத்தப்பட்ட கூட்டுப் பொறுப்பு ஒரு நூறு ($100.00) டாலர்களை விட அதிகமாக இருக்ககூடாது.

ஒட்டுமொத்த ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தம் இந்த வலைத்தளத்தின் அணுகல் மற்றும்/அல்லது பயன்பாட்டைப் பொறுத்து உங்களுக்கும் சின்ஜென்ட்டாவுக்கும் இடையிலான ஒட்டுமொத்த ஒப்பந்தத்தையும் அடக்கியுள்ளது.

நடைமுறைப்படுத்திய தேதி

மேலே விளக்கிக் கூறப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஜனவரி 2016 முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கட்டுப்படுத்தும் சட்டம்

மேலே விளக்கிக் கூறப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்தியச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படும், அவற்றுக்கு இணங்க பொருள்கொள்ளப்படும் மற்றும் அவற்றுக்கு உட்பட்டதாக இருக்கும். மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக எழும் எந்தவொரு வழக்கையும் செயல்படுத்துவதும் விசாரிப்பதும் புனே நீதிமன்றங்களின் பிரத்தியேக சட்ட அதிகாரவரம்புக்கு உட்பட்டதாகும்.